Posts

Showing posts from February, 2023

காலை சிற்றுண்டி வழங்கும் விழா

Image
  செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 01.03.2023 அன்று காலை 8.30 மணி அளவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் தொடக்க விழாவானது திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் ரகுராமன் அவர்கள் தலைமையிலும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். ரவிகுமார்,  துணை தலைவர் நசீர், பொருளார் அண்ணாதுரை, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் எம். சின்னதுரை, துணை தலைவர் சிவகுமார், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவி, துணை தலைவர் சையத்பாஷா மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் கோப்பை - கால்பந்து விளையாட்டு போட்டிகள்

Image
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காக திருவண்ணாமலை மாவட்ட அளவில் 25.02.2023 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பள்ளி மாணவியருக்கான கால்பந்து போட்டியில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் வெற்றி பெற்று பரிசுகளை வென்றனர். முதலிடம் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.      வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களான தணிகைவேல், பாரதி, சுமதி, ராஜ்மோகன் ஆகியோர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் பாராட்டினார்.

நான் முதல்வன் திட்டம்

Image
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு JEE Main தேர்வு மற்றும் CUET (Central University Entrance Test) ஆகியவற்றை எவ்வாறு பதிவு செய்வது மற்றும் அத்தேர்வின் நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பிரேமலதா, முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்), எம். முரளி, முதுகலை ஆசிரியர் (விலங்கியல்) மற்றும் கணினி ஆசிரியர் பி. ரூபேஷ்குமார் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அறிவியல் மன்றம்

Image
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம்  27.02.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திருவேங்கடம் அவர்கள் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர்  விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப் படுத்தினர். மாணவர்கள் அறிவியல்  செய்முறை விளக்கங்களை காட்சிப் படுத்த அறிவியல் ஆசிரியர்களான கருணா, சங்கீதா, பானு, மணிகண்டன் ஆகியோர் உதவி புரிந்தனர்.

மரக்கன்று நடும் விழா

Image
 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தினை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழுவின் சார்பில் பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடுவிழா செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 23.02.2023 காலை 10 மணிஅளவில் நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவி, துணை தலைவர் சையத்பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிகுமார், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. உமாமகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.

NEET தேர்வு எழுதுவதற்கான அறிவுரை - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி

Image
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமதி. M. உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் செய்யாறு லயன்ஸ் சங்க Region Chairman M. சண்முகம் அவர்கள் முன்னிலையில் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயிலும் மாணவர்கள் NEET தேர்வினை சிறப்பாக எழுதுவது குறித்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவர் மரு. கிருத்திகா, மரு. ரவிசங்கர், மரு. தினேஷ், மரு. பிரபாகரன் மற்றும் செய்யாறு பல்மருத்துவர் மரு. ரமேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு எழுதுபொருட்களை வழங்கினர். இறுதியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. M. ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.

உடற்கல்வித்துறை - மாநில அளவில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பாராட்டு

Image
  செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் Foot ball மற்றும்  Hand ball ஆகிய போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பதக்கங்களும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.