காலை சிற்றுண்டி வழங்கும் விழா
செய்யாறு
அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 01.03.2023 அன்று காலை 8.30 மணி அளவில் 1
முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு
திட்டத்தின் தொடக்க விழாவானது திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் ரகுராமன் அவர்கள் தலைமையிலும்,
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இவ்விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். ரவிகுமார், துணை தலைவர் நசீர், பொருளார் அண்ணாதுரை, பள்ளி
வளர்ச்சிக்குழு தலைவர் எம். சின்னதுரை, துணை தலைவர் சிவகுமார், பள்ளி மேலாண்மைக்குழு
தலைவர் தேவி, துணை தலைவர் சையத்பாஷா மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்
கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கினர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர்
விஜயலட்சுமி அவர்கள் நன்றி தெரிவித்தார்.



.jpeg)
.jpeg)

Comments
Post a Comment