தமிழ்க்கூடல் துவக்கவிழா
தமிழ்க்கூடல் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இப்பள்ளியின் தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கூடல் நிகழ்ச்சி 11.09.2023 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்றது. இதில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் திரு. கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவிகள் பேச்சு, கவிதை, பாடல், நாடகம் மற்றும் பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இப்பள்ளியின் முன்னாள் மாணவியர் சங்க தலைவியும் நல்லாசிரியருமான மெய். பூங்கோதை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளையும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார். இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஓ. தயாளன் அவர்கள் நன்றி தெரிவித்தார். ...