77 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் 77வது சுதந்திர தினம் இப்பள்ளியில் வெகு விமரிசையாக 15.08.2023 அன்று காலை 8.30 மணியளவில் கொண்டாடப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்ற, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ஜீனியர் ரெட்கிராஸ், பாரத சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப் படை, மாணவர் காவல்படை மற்றும் நாட்டுநலப்பணிதிட்டம் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். உலக அரங்கில் சுதந்திர இந்தியாவின் பல்துறை வளர்ச்சி குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்டதேசத் தலைவர்களை நினைவு கூர்ந்தார். புலவர் கோவிந்தனார் அறக்கட்டளையின் நிறுவனர் அறிவுடை நம்பி அவர்கள் ரூபாய் 2 இலட்சம் வைப்பு தொகை வங்கியில் வைத்து அதில் வரும் வட்டி தொகையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்குவதற்கு வழங்குவது போல இவ்வாண்டும் காசோலைகளை பரிசாக வழங்கினார். மேலும் இவ்வாண்...