Posts

Showing posts from July, 2023

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

Image
  செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று 28.07.2023 பிற்பகல் 3 மணி அளவில் இப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவினை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி அவர்களின் அறிவுரையின்படி, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்ற, செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் திரு. ஆ. எல்லப்பன் அவர்கள் முன்னிலையில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஓ. ஜோதி அவர்கள் 510 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  2021-2022 கல்வியாண்டில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய போது செய்யாறு கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று சிறப்பிடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதாக உறுதியளித்ததையொட்டி, 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த இப்பள்ளி மாணவி கவிப்பாரதி என்பாருக்கு ரூ. 1,05,000/-யை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன் அவர்களும், இரண்டாம் இடம் பிடித்த ச...

பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் துவக்கம்

Image
 செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 24.07.2023 அன்று காலை 10.00 மணி அளவில் பள்ளி அளவிலான சதுரங்க போட்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி அவர்கள் துவங்கி வைத்தார். இப்போட்டியில் 3 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளியின் உடற்கல்வி இயக்குநரான திருமதி. சி. பாரதி, உடற்கல்வி ஆசிரியர்களான திரு. பி. தணிகைவேலு, திருமதி. எம். சுமதி, திரு. கே. ராஜ்மோகன் ஆகியோர் பள்ளி அளவிலான போட்டிகளை சிறப்பாக நடத்தினர். இறுதியாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு. ஒ. தயாளன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் கோப்பை - மாவட்ட அளவில் வெற்றி, மாநில அளவில் பங்கேற்ப்பு

Image
   செய்யாறு அரசு மாதிரி மகளிர் பள்ளியின் மாணவிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் 2 அணிகள் கலந்து கொண்டு  முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர். முதலிடம் பெற்ற அணி மாணவிகளுக்கு தலா ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 3000 மற்றும் மூன்றாம் இடம் பெற்ற அணி மாணவிகளுக்கு ரூ. 1000 ஆகியவற்றையும், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை  இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் மாணவிகளுக்கு இன்று வழங்கினார். மேலும் மாநில அளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  கால்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.  இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த இப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் திருமதி. சி. பாரதி, உடற்கல்வி ஆசிரியர்களான திரு. தணிக்கைவேல், திருமதி. எம். சுமதி, திரு. கே. ராஜ்மோகன் ஆகியோர்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

காமராஜர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்

Image
            செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவினை கல்வி வளர்ச்சி நாளாக 15.07.2023 காலை 9.30 மணிக்கு கொண்டாடப்பட்டது. இதில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.            இதனை தொடர்ந்து இப்பள்ளியின் மூத்த முதுகலை தமிழ் பாட ஆசிரியர் திருமதி. சுமதி அவர்கள் காமராஜரர் மக்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் ஆற்றிய பணிகள் பற்றியும் அவரின் சிறப்புகளை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். கவிதை, பாடல் மற்றும் பேச்சு ஆகியவற்றின் மூலம் மாணவிகளும் காமராசர் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.     இறுதியில் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.