முதலமைச்சர் கோப்பை - மாவட்ட அளவில் வெற்றி, மாநில அளவில் பங்கேற்ப்பு
செய்யாறு அரசு மாதிரி மகளிர் பள்ளியின் மாணவிகள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் திருவண்ணாமலை மாவட்ட அளவில் 2 அணிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர். முதலிடம் பெற்ற அணி மாணவிகளுக்கு தலா ஒவ்வொரு மாணவிக்கும் ரூ. 3000 மற்றும் மூன்றாம் இடம் பெற்ற அணி மாணவிகளுக்கு ரூ. 1000 ஆகியவற்றையும், சான்றிதழ் மற்றும் பதக்கங்களை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் மாணவிகளுக்கு இன்று வழங்கினார்.
மேலும் மாநில அளவில் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த இப்பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் திருமதி. சி. பாரதி, உடற்கல்வி ஆசிரியர்களான திரு. தணிக்கைவேல், திருமதி. எம். சுமதி, திரு. கே. ராஜ்மோகன் ஆகியோர்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Post a Comment