காமராஜர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட்டம்

           செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவினை கல்வி வளர்ச்சி நாளாக 15.07.2023 காலை 9.30 மணிக்கு கொண்டாடப்பட்டது. இதில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 

          இதனை தொடர்ந்து இப்பள்ளியின் மூத்த முதுகலை தமிழ் பாட ஆசிரியர் திருமதி. சுமதி அவர்கள் காமராஜரர் மக்களுக்கும், மாணவ செல்வங்களுக்கும் ஆற்றிய பணிகள் பற்றியும் அவரின் சிறப்புகளை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.


கவிதை, பாடல் மற்றும் பேச்சு ஆகியவற்றின் மூலம் மாணவிகளும் காமராசர் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.

 

 













இறுதியில் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.






Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா