விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

 

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று 28.07.2023 பிற்பகல் 3 மணி அளவில் இப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவினை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. கணேசமூர்த்தி அவர்களின் அறிவுரையின்படி, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எம். உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்ற, செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலர் திரு. ஆ. எல்லப்பன் அவர்கள் முன்னிலையில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஓ. ஜோதி அவர்கள் 510 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

2021-2022 கல்வியாண்டில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய போது செய்யாறு கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று சிறப்பிடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவதாக உறுதியளித்ததையொட்டி, 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த இப்பள்ளி மாணவி கவிப்பாரதி என்பாருக்கு ரூ. 1,05,000/-யை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன் அவர்களும், இரண்டாம் இடம் பிடித்த சித்தாத்தூர் மாணவருக்கு ரூ. 1,00,000/- யை வெம்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவர் திரு. டி. ராஜீ அவர்களும் அளித்து வாழ்த்தினர். பிறகு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

 விலையில்லா மிதிவண்டிகளை பெற்ற மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்  திரு. எம். ரவிக்குமார் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் திரு. சின்னதுரை மற்றும் உறுப்பினர்கள், திருவத்திபுரம் நகர மன்ற உறுப்பினர்களான திரு. விஸ்வநாதன், திருமதி. பேபி ராணி,  பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி. தேவி மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி நன்றி கூறினார். 











இப்பள்ளி மாணவி கவிப்பாரதிக்கு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. பார்வதி சீனிவாசன் அவர்கள் ரூ. 1,05,000/- வழங்கியபோது

மாணவி கவிப்பாரதிக்கு பள்ளி வளர்ச்சி நம் தலைமை ஆசிரியரிடம் ரூ. 20,000/- வழங்கிய நிகழ்வு

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. ஓ. ஜோதி அவர்கள் 510 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய நிகழ்வு







 

Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா