குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி

 

ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் 

செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி

 

        செய்யாறு கல்வி மாவட்டத்தின் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மேல்மட்டை விண்ணமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்தது. இதில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தினை பெற்றமைக்காக திருவண்ணாமலை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. J. சின்னப்பன் அவர்கள் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து போட்டியில் வெற்றி மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

      மேலும் ஒட்டுமொத்த போட்டியில் வெற்றி பெற்றமைக்கான கோப்பையினை இப்பள்ளி தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம். ரவிக்குமார் ஆகியோர்களிடம் ஒப்படைத்தார்.

      வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி, தணிகைவேல், சுமதி, இராஜ்மோகன் ஆகியோர்களை வாழ்த்தினார். இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஓ. தயாளன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.














 

Comments

  1. போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவியருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்! பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்!! ஊக்கமளித்த தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றிகள்!!! வெற்றிப் பயணம் மாநில அளவிலும் தொடரட்டும்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முப்பெரும் விழா