போதை பொருள் ஒழிப்பு - செய்யாறு காவல் ஆய்வாளர்
செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10.08.2023 அன்று மாலை 4.00 மணியளவில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் தலைமையில் செய்யாறு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சோனியா மற்றும் காவலர் திருமதி. பிரபாவதி ஆகியோர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் போதை பொருள் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை ஏற்றனர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. திருவேங்கடம் அவர்கள் நன்றி தெரிவித்தார்.



.jpg)


Comments
Post a Comment