77 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

 

77 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

     77வது சுதந்திர தினம் இப்பள்ளியில் வெகு விமரிசையாக 15.08.2023 அன்று காலை 8.30 மணியளவில் கொண்டாடப்பட்டது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்ற, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து,  ஜீனியர் ரெட்கிராஸ், பாரத சாரணியர் இயக்கம், தேசிய பசுமைப் படை, மாணவர் காவல்படை மற்றும் நாட்டுநலப்பணிதிட்டம் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு  சிறப்புரையாற்றினார். 








    
உலக அரங்கில் சுதந்திர இந்தியாவின் பல்துறை வளர்ச்சி குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்டதேசத் தலைவர்களை நினைவு கூர்ந்தார். 


புலவர் கோவிந்தனார் அறக்கட்டளையின் நிறுவனர் அறிவுடை நம்பி அவர்கள் ரூபாய் 2 இலட்சம் வைப்பு தொகை வங்கியில் வைத்து அதில் வரும் வட்டி தொகையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்குவதற்கு வழங்குவது போல இவ்வாண்டும் காசோலைகளை பரிசாக வழங்கினார். மேலும் இவ்வாண்டு கூடுதலாக ரூபாய் 1 இலட்சம் அறக்கட்டளைக்கு வைப்பு தொகையாக வழங்கியுள்ளார்.


12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள்



11 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள்




10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள்




இந்நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர மன்ற துணை தலைவர் பேபி ராணி, நகர மன்ற உறுப்பினர் விஸ்வநாதன்,  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தேவி, முன்னாள் மாணவியர் சங்க தலைவி மெய்- பூங்கோதை மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இறுதியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி அவர்கள் நன்றி தெரிவித்தார்.




 

 

Comments

Popular posts from this blog

முப்பெரும் விழா